மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் இளைஞர் பிரிவு அண்மையில் நடைபெற்ற வசந்த விழாவில் புகைப்படங்கள் எடுத்து நிதி திரட்டினர். திரட்டிய நிதியில் சிறுவர்களுக்கான பிறந்தநாள் பரிசுகளை வாங்கி 'அக்கறை வட்டம்' (Circle-of-Concern) நிறுவனத்திடம் அளித்து, அப்பகுதியிலுள்ள பத்து ஏழைச் சிறார்களுக்கு நன்கொடையாக அளிக்குமாறு ஏற்பாடு செய்தனர்.

(படத்தில் (இடமிருந்து வலமாக): மிமி ஷ்நெட்லர் (அக்கறை வட்டத்தின் தொண்டூழியர்), பூர்ணாஸ்ரீ மலர்வண்ணன், விநித்ரா மதபூசி, பிரவீன் பகவன்தாஸ், மிஹிர் பார்த்தசாரதி (மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் இளைஞர் குழு உறுப்பினர்கள்)

பகவந்தாஸ் பலராமன்

© TamilOnline.com