ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஜூலை 20, 2008 அன்று அன்னமாசார்யாவின் கிருதிகளை மட்டுமே கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை 'கமனீய கவித்துவம்' என்ற பெயரில் ரம்யா மற்றும் அஞ்சலி குச்சிபாட்லா சகோதரிகள் ஹைதராபாதிலுள்ள ரவீந்திரபாரதியில் வழங்கினர். குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யைகளாகிய ரம்யாவும் அஞ்சலியும் முன்னர் கனடாவிலும் கலிபோர்னியாவிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டோர் வந்திருந்து இவர்களது நடனத்தைக் கண்டு களித்தனர்.

நிகழ்ச்சிக்கு கே.எஸ். சர்மா (CEO SV Bhakti TV) தலைமை வகித்தார். அவர் இந்தியக் கலைகளை உலகெங்கிலும் பரப்புவதில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்கைப் புகழ்ந்து பேசினார். ரேணுகா பிரசாத் (நட்டுவாங்கம்), ஸ்வேதா பிரசாத், எம். ஸ்ரீனிவாஸ் (வாய்ப்பாட்டு); பிரமோத் (புல்லாங்குழல்), ஸ்ரீதராசார்யா (மிருதங்கம்), சுதாகர் (வீணை) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.



© TamilOnline.com