ஆகஸ்ட் 9, 2008 அன்று TAGDV-யின் கோடைச் சுற்றுலா ரிட்லி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. TAGDV உறுப்பினர்கள் ஆளுக்கொரு உணவாகச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். விஜி, லதா, ரமா மற்றும் பலர் உதவியுடன் அழகான மேசை தயாரானது. தலைவர் கவிதாஸ் அனைவருக்கும் TAGDV-யின் முத்திரை பதித்த சட்டையை வழங்கினார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நிறைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேக்கரண்டியில் எலுமிச்சையைச் சுமந்தபடி ஓடுதல், குழந்தைகள் முதுகுப்பக்கம் பலூனைக் கட்டிக் கொண்டு, தன் பலூனைக் காப்பாற்றியபடி பிறர் பலூனை உடைத்தல் என்று நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. துரைக்கண்ணன் குழந்தைகளுக்கு உதவி செய்தபடி இருக்க, வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். மாலை நான்கு மணி அளவில் அங்கேயே காபியும் தயாரித்து வழங்கப்பட்டது. மொத்தத்தில் சுற்றுலா மறக்க முடியாததாக இருந்தது.
லதா சந்திரமௌலி |