பாட்டி பாட்டி கதை சொல்லுங்க!
பாட்டி பாட்டி கதை சொல்லுங்க
பாலர் விரும்பும் கதை சொல்லுங்க
பாடம் படிப்பேன் கதை சொல்லுங்க
நல்ல பிள்ளையார் கதை சொல்லுங்க

பள்ளிக்குச் செல்ல கதை சொல்லுங்க
நேரத்தில் செல்வேன் கதை சொல்லுங்க
காந்தித் தாத்தா கதை சொல்லுங்க
கருத்தாய் வளர கதை சொல்லுங்க

நேரு மாமாவின் கதை சொல்லுங்க
நேர்த்தியாய் வாழக் கதை சொல்லுங்க
நல்ல நல்லதாய்க் கதை சொல்லுங்க
நாங்கள் ரசிக்கும் கதை சொல்லுங்க

சீனிவாசன் திருநாவுக்கரசு

© TamilOnline.com