ஆகஸ்ட் 17, 2008 அன்று கனெடிகட் கேபிடல் கட்டிடத்தில் இந்திய சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Indian Association of Greater Hartford (IAOGH) என்ற அமைப்பின் மூலம் நமது மூவர்ணக் கொடி ஹார்ட் ஃபோர்டு நகரத்தில் துணை கவர்னரின் தலைமையில் ஏற்றப்பட்டது.
கனெடிகட் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'சங்கே முழங்கு', 'ஆனந்தக் கும்மி', 'கண்ணபிரான் களிநடனம்' ஆகியவை அருமையாக இருந்தன. பத்து வயதுக்குட்பட்ட சிறுமியர் அபிநயா நிரஞ்சனும், ப்ரீதிகா சேஷாத்திரியும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று கம்பீரமாகப் பாடியது அற்புதம். பலமொழிச் சங்கங்கள் பங்கு கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரதப் பாரம்பரியத்தை நிலை நாட்டினர்.
நித்யா சுவாமி |