செப்டம்பர் 27, 2008 அன்று மாலை 6:00 மணிக்கு இந்தியாவுக்கான வளர்ச்சிக் கழகம் (Association of India's Development) இண்டியன் ஓஷன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஒன்றை ரேச்சல் எம். ஷ்லீஸிங்கர் இசையரங்கத்தில் (Rachel M. Schlesinger Concert Hall and Arts Center, Northern Virginia Community College, Alexandria Campus 3001 North Beauregard Street, Alexandria, VA 22311) ஏற்பாடு செய்துள்ளது. ஊரகப் பகுதிகளில் இருக்கும் விளிம்புநிலை மனிதர்களை உயர்த்துவதற்காக நிதி திரட்டும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் இந்த அமைப்புக்குத் தரப்படும் நன்கொடைக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு உண்டு.
இண்டியன் ஓஷன் இந்திய இசையுடன் ராக் இசையை விரவி வழங்கும் குழு ஆகும். எடின்பர்க் விளிம்பு விழா, நியூஸிலாந்து கலைவிழா, ஸ்மித்சோனியன் நாட்டுப்புற வாழ்க்கை விழா போன்றவற்றிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல அரங்கு நிரம்பிய காட்சிகளை வழங்கியுள்ளது. ஐந்து இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. Black Friday என்ற இந்திப் படத்துக்குப் பின்னணி இசை வழங்கியுள்ளது.
AID குறித்து மேலும் அறிய: aidindia.org
இந்த நிகழ்ச்சி குறித்து அறிய: www.indianoceanindc.com/CP/index.php
நுழைவுச்சீட்டுகள்: $ 25**, $35, $50, $100
சீட்டுகள் வாங்க: www.sulekha.com, www.indianoceanindc.com
தகவலுக்கும், தள்ளுபடிக்கும்: தொலைபேசி - 202.683.7678
**$25 நுழைவுச் சீட்டுகள் மாணவர் அடையாள அட்டை உடையவர்களுக்கு மட்டுமே.
குழந்தைகள்: 3 முதல் 10 வயதுவரை 50% தள்ளுபடி - $50, $100 சீட்டுகளில்.
2 வயதும் அதற்குக் கீழும் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை (பெற்றோர் மடியில் அமரவேண்டும்).
அருண் கோபாலன் |