பார்வையற்றோருக்கான பல கல்விச் சேவைகளைச் செய்துவரும் வித்யா விருட்சம் (Vidyavrikshah) அமைப்பு நிதி திரட்டும் பொருட்டு 'நிருத்ய சங்கமம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை சான் ஹோசே CET அரங்கத்தில் செப்டம்பர் 14, 2008 அன்று மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் திரட்டப்படும் நிதி சென்னையில் விழியிழந்தவர்க்கான சைபர் கஃபே ஒன்றைத் தொடங்கப் பயன்படுத்தப்படும்.
இதில் பரதநாட்டியம், குச்சிபுடி, கதக், ஒடிசி ஆகியவை தவிர 8 வகை இந்திய நாட்டுப்புற நடனங்கள் ஒரே மேடையில் முதன்முறையாக இடம்பெறும். இந்த நிகழ்ச்சிகளை ஜ்யோதி கலாமந்திர், ரூப்நர்த்தன் டான்ஸ் ஸ்கூல், விஷ்வசாந்தி டான்ஸ் அகாடமி, நாட்யாலயா குச்சிபுடி டான்ஸ் ஸ்கூல், நூபுர் ஃபோக் டான்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
வித்யாவிருட்சத்துடன் இணைந்து தொண்டு செய்ய விரும்புவோரும் உடனடியாகத் தொடர்புகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.
இணையதளம்: www.vidyavrikshah-usa.org
நுழைவுச் சீட்டு: $50 (சிறப்பு), $20 (பொது)
சீட்டுகள் வாங்க: விஜி திலீப் - 408-656-8162, ராதிகா கோஸ்வாமி - 408-205-4500
மேலும் தகவலுக்கு: vidyavrikshah@gmail.com, nirmal@nupurfolkdnace.org |