சரவணன் நடிக்கும் கருப்பன்
பழம்பெரும் குணச்சித்திர நடிகை எஸ்.என்.லட்சுமி. இவரது பேரன் வி.ஹரி, 'கருப்பன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். விருதுநகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகிறதாம். 'நாயகன்' படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் போன்று, இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில், 55 வயது பெரிய மனிதராக சரவணன் நடிக்கிறார். 'பருத்தி வீரன் திரைப்படத்துக்குப் பிறகு இத்திரைப்படம் சரவணனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்' என்கிறார் படத்தின் இயக்குநர் வி.ஹரி. இசை - ஆதித்யன். பாடல்கள் - யுகபாரதி. ஒளிப்பதிவு - கே.ஆர்.லட்சுமிராஜ். தயாரிப்பு - ஆரஞ்ச் கம்யூனிகேஷன்ஸ்.

அரவிந்த்

© TamilOnline.com