நான், அவள், அது
மாதவன், சதா நடித்து வந்த லீலை என்ற படத்தின் பெயர் தற்போது நான், அவள், அது என்று மாற்றப்பட்டுள்ளது. ஸ்டாம் பிக்சர்ஸ் தயாரிப்பில் சில்வர் ஸ்கிரீன் இமேஜ் இந்தியா இதனை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீமன், சாயாஜி ஷிண்டே, ஷமிதா ஷெட்டி என பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்பவர் கே. வெங்கட். இவர், ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இசை: ஜி.வி. பிரகாஷ்குமார். பாடல்கள்: நா.முத்துகுமார், பா.விஜய். சென்னை, ஹைதராபாத், ஆஸ்திரேலியா, பாங்காக் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com