அம்சவர்தனின் குரு 2009
பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அம்சவர்தன். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும்படியாக ஏதும் அமையவில்லை. இந்நிலையில் பாண்டியன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கும் குரு 2009 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அமசவர்தன். குடிசைவாழ் இளைஞன் ஒருவனைப் பற்றிய கதையாம் இது. அடுத்து 'பொம்மன்' என்ற படத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கும் இவர், அதற்காக முன்னணிக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து அறிவுரை பெற்றுவருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com