மேதை ராமராஜன்
மக்கள் நாயகன் என ஒருகாலத்தில் அழைக்கப்பட்டவர் ராமராஜன். நடிகர், கதையாசிரியர், இயக்குனர் என பலதுறைகளில் சாதித்த இவர், நடுவில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் ஹரியின் உதவியாளர் என்.டி.ஜி. சரவணன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ராமராஜன். இப்படத்திற்கு மேதை என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஜோதிர்மயி நடிக்கிறார். படத்தில் ராமராஜனுக்குப் பள்ளி ஆசிரியர் வேடமாம். படத்திற்காக தன்னுடைய உடல் குறைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ராமராஜன்.

அரவிந்த்

© TamilOnline.com