கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பரத் பாலா வால்ட் டிஸ்னியுடன் இணைந்து '19 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார். இதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அஸின் கதாநாயகி. பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் கதையில் உருவாக இருக்கிறது இந்தப் படம். 9ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக உள்ள இப் படத்தில் கமல்ஹாசன் களரிச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரிடம் களரி கற்றுக் கொள்ளும் மாணவராக ஜப்பானிய நடிகர் அசானோ நடிக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகவுள்ளது. இசை ஏ.ஆர். ரகுமான்.

அரவிந்த்

© TamilOnline.com