கணிதப் புதிர்கள்
1. 10989-ஐ 9ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும், 21978-ஐ 4 ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

2. ஒரு தொடர்வரிசையில் வரும் மூன்று எண்களின் பெருக்குத் தொகையும், அதே தொடர்வரிசையில் வரும் நான்கு எண்களின் பெருக்குத் தொகையும் சமமாக இருக்க வேண்டும். இயலுமா?

3. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை = 101; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 25. அந்த எண்கள் எவை?

4. ஒரு பள்ளியில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் மீதம் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் பற்றாக்குறையாக இருந்தன. அப்படியென்றால் சாக்லெட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

5. 6729, 13458 இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

விடைகள்



அரவிந்த்

© TamilOnline.com