தேவையான பொருட்கள் கீரை - 2 கட்டு சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் வற்றல் - 1 எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை கீரையைப் பொடியாக நறுக்கி உப்புச் சேர்த்து வேகவிட்டுக் கடையவும். வேக வைத்த துவரம்பருப்பை அத்துடன் சேர்த்து, சாம்பார்ப் பொடி போட்டுக் கொதிக்க விடவும். அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, தேங்காயைச் சிவக்க வறுத்துப் போடவும். மிளகாயைத் தாளித்து, கறி வேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும். இதுவும் சுவையான ஒரு கூட்டு.
கூட்டுக் கருவடகம் இருந்தால் வறுத்துப் போடலாம். சுவை கூடுதலாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |