தேவையான பொருட்கள் கீரை - 2 கட்டு வெங்காயம் - 4 தக்காளி - 4 மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி பனீர் (Indian cottage cheese) - 1/2 பவுண்டு பால் - 1/2 கிண்ணம் பாவ்பாஜி மசாலாப் பொடி - 2 தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை கீரையை கழுவிப் பொடியாய் நறுக்கி, தேவையான அளவு உப்புச் சேர்த்து வேகவிடவும். பின் நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, நறுக்கி லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, மசித்த கீரை, அரைத்த தக்காளி-வெங்காய விழுதைப் போட்டு ஒரு கொதி வந்ததும் மசாலாப் பொடியைத் தூவவும்.
பனீரை சிறிய கனசதுரத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வறுத்தோ பச்சையாகவோ போடலாம். அடுப்பிலிருந்து இறக்கி கெட்டிப் பாலாகவும் விடலாம். வெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்.
வெங்காயம், தக்காளி அரைக்காமல் பொடியாக நறுக்கி, சுருள வதக்கி, கீரையுடன் சேர்த்தும் செய்யலாம். இது சப்பாத்திக்கு ஏற்ற ஒரு நல்ல சப்ஜி. மிகவும் சுவையானது.
தங்கம் ராமசாமி |