கீரை வெல்லக் கூட்டு
தேவையான பொருட்கள்
கீரை - 2 கட்டு
வெல்லம் - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொண்டைக்கடலை (அ)
காராமணி (அ) வேர்க்கடலை (அ)
மொச்சைப்பருப்பு (ஊற வைத்து
வேக வைத்தது) - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
புளித்தண்ணீர் - 1/2 கிண்ணம்

செய்முறை
கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கி, உப்பு போட்டு வேகவிட்டு மசித்து வைக்கவும். கொத்துமல்லி விதை, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தேங்காய், பெருங்காயம் இவற்றைச் சிவக்க வறுத்து அரைத்து,
புளிக்கரைசலுடன் சேர்த்து, வெல்லத்தையும் அதில் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

பின் மசித்து வைத்துள்ள கீரையையும், வேகவைத்த கடலையையும் அத்துடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இது மிகவும் சுவை மிக்க கூட்டு.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com