மார்ச் 2007: குறுக்கெழுத்துபுதிர்
குறுக்காக

5. துரைசாணி வெண்மேகத்தினள் (6)
6. நாவலரால் ஆறாய் அறியப்படுவது (2)
7. குரலை உயர்த்தி பயமுறுத்து அல்லது முதலில் கதவைத் திறக்க வேண்டு (4)
9. படித்துச் சம்பாதித்தவனிடம் ஒரு பொருட்டில்லாத ஒன்று (4)
10. நாள் பட்டு வலுவிழந்த மரம் போன்ற பருப்பொன்று முழுமையில்லை (4)
12. கை, கால், தலை, வயிறு... எல்லாம் காயம் (4)
13. உலக்கையை வளைக்கை போல் தோற்றமளிக்க வைப்பது (2)
14. கிஸான் தாஸ் கம்யூனிஸ்டுத் தலைவரைச் சேர்த்துக் குழம்பிய நாடு (6)

நெடுக்காக
1. கொட்டும் கொடுக்கும் இருக்கும் (2)
2. பெண்ணைப் பார்க்க முடியாமல் மறைக்கும் வனம், வனம், வனம் (4)
3. பேச்சில் ஆதரவாக சுரத்துடன் உதைத்து ஆடுவது (4)
4. மூன்று தமிழ் ஒரு அணா முக்கால் கலசம் கொண்டவன் (6)
8. எரிபொருளின்றி ஓடும் வாகனம் நாம் முன்னே செல்ல உதவாது! (3, 3)
11. தகடு வடாம் வடு மாயமாகிக் குழம்பிய குளம் (4)
12. மனம் நெகிழ்ந்த பாதி அழகிய வடிவம் முன் வந்தது (4)
15. சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து ஒரு பணிப்பெண் (2)

vanchinathan@gmail.com

பிப்ரவரி 2007 விடைகள்

குறுக்காக: 3. தசாங்கம், 6. துரும்பு, 7. பட்டிழை, 8. கடுங்காவல், 13. அடுத்தவன், 14. சங்கிலி, 15. காதற்ற, 16. கொடும்பாவி

நெடுக்காக: 1. புதுமுகம், 2. தெம்மாங்கு, 4. சாம்பல், 5. கட்டிய, 9. வண்டு, 10. சத வீதம், 11. பொன்னிறம், 12. பங்கிடு, 13. அலிபாபா


பிப்ரவரி 2007 புதிர் மன்னர்கள்
1. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமோண்ட், கலிபோர்னியா
2. விஜயா அருணசலம், ·ப்ரீமோண்ட், கலிபோர்னியா
3. லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை

© TamilOnline.com