நமீதாவின் ஜகன் மோகினி
தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியாகி அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் விட்டலாச்சார்யாவின் ஜகன்மோகினி. அப்படம் இப்போது மீண்டும் தயாராகிறது. நமீதா கதாநாயகியாக நடிக்கும் அப்படத்தில் ராஜா என்னும் தெலுங்கு நடிகர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் என்.கே. விஸ்வநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
'மாயாஜாலக் காட்சிகளும் கவர்ச்சியும் நிறைந்த படமாக இப்படம் இருக்கும்' என்று உறுதி கூறுகிறார் இவர். படத்தில் வடிவேலு, நிலா, யுவராணி, கோட்டா சீனிவாசராவ் இவர்களுடன் ஒரிஜனல் ஜெகன்மோகினியின் கதாநாயகனான நரசிம்மராஜூவும் நடிக்க இருக்கிறார். முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, அந்தமான் எனப் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசை இளையராஜா.

அரவிந்த்

© TamilOnline.com