தேவையான பொருட்கள்
புளி - 1 சிறு பந்து அளவு துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 4 மிளகு - 2 தேக்கரண்டி தனியா - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1/2 கிண்ணம் சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 8 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு பருப்பு, மிளகு, மிளகாய், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, கறிவேப்பிலை புளி உப்புடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து புளிக் கரைசலை ஊற்றி கெட்டியாக கொதிக்க விடவும். கெட்டியாய் இருந்தால் நன்றாக இருக்கும்.
சிலர் புளியைக் கரைத்துக் கொதிக்க விட்டு மற்றவைகளைப் பொடி செய்து போட்டு நீர்க்கச் செய்வர். இது நெடுநாள் கெடாமல் இருக்கும்.
தங்கம் ராமசாமி |