ஜூலை மாதப் புதிரில் 'கழுத்து வெண்ணிறமென்பதால் நீலக்கழுத்து வாசிக்கு ஆகாதோ?' என்ற குறிப்புக்கு "கண்டம்" என்ற விடையைச் சிலர் அளித்திருந்தனர். திருநீலகண்டர் என்று தோன்றியதால்தான் இது வந்துள்ளது என்பது புரிகிறது. ஆனால் நீலக்கழுத்துவாசியான பாம்புக்கு ஆகாத வெண்ணிறக் கழுத்தையுடையவன் என்று பொருள் கொண்டால் 'கருடன்' என்ற விடையின் பொருத்தம் வெளிப்படும்.
அப்புதிரில் "குறைவான தானியம் செயல் பெண்ணெடுப்பது" என்ற மற்றொரு குறிப்புக்கான விடை "கொள்வினை". "கொள்வினை, கொடுப்பினை" என்பது கிராமங்களில் திருமண சம்பந்தத்தைக் குறிக்க பேச்சில் பரவலாக வழங்கப்படுவது.
சென்னையில் புதிர் ஆர்வலர்கள் சந்திப்பு. திட்டமிடவும் விவரங்களை அறியவும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: vanchinathan@gmail.com
குறுக்காக
3. மதகுருவிடம் வெள்ளத்தை அடக்குந்திறனுண்டு (3)
5. விரியா மட்டை மீண்டுவந்த ஞாயிற்றுக்கு முன் வலம் வரும் (5)
6. 7இல் இருப்பதை இப்படியாகப் பயன்படுத்த முடியாது (2)
7. தன்னுடையே தான் என்றிருக்கும் நெல் (3)
8. தெளிவாக்கத் தரப்படுவது இருளையோட்டும் (5)
11. அப்படி ஆடு, மாடு இல்லாமல் சுற்றிவர வீட்டில் ஓரிடம் (5)
12. மொட்டைத்தலையை முழங்காலொடு இணைக்க ஒரு தந்திரம்? (3)
14. உள்ளிருக்கும் ஆன்மா சுத்தமில்லை! (2)
16. மையல் கொள்ள அதன் வலிக்காக அவனின்றி அசையும் (5)
17. வேலியின் கதவு மேலே விழுதல் (3)
நெடுக்காக
1. பெண்ணுக்குத் தாய் தந்தையில்லாத ஓரிடம் (4, 2)
2. வேலையில் அதிர்ஷ்டம் இல்லையென்றாலும் தந்திரமான வழிமுறை (3)
3. இன்றைய வஞ்சி பேசுவது (5)
4. விறகு விற்றுக் கொண்டு சேர் (2)
9. கற்பனை தேசம் எல்லைகளின்றி மவுனம் கலைய கலகம் வெளிப்படும் (6)
10. தணலை ஏந்தி ஆண்டவன் முன்னே சுற்றுவது (5)
13. மூவேந்தரில் முதல்வன் கைலி மடித்துக்கட்டிய தாவரம் (3)
15. நல்ல மாடு மேலே சென்றது (2)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஆகஸ்டு 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஆகஸ்டு 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
ஜூலை 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. ஆதங்கம் 6. தயங்கி 7. பிண்டம் 8. பஞ்சப்படி 13. முல்லைக்கொடி 14. கொள்வினை 15. மணக்க 16. முடியாது
நெடுக்காக: 1. கதம்பம் 2. அங்குசம் 4. தம்பிடி 5. கருடன் 9. பரல் 10. தக்கணம் 11. அடிக்கல் 12. தள்ளாடி 13. முனைந்து
ஜூலை 2008 புதிர் அரசிகள் / மன்னர்
1. ஆ.வே. லக்ஷ்மிநாராயணன், ராஸ்வெல், ஜார்ஜியா
2. ராமையா நாராயணன், ரெட்மண்ட், வாஷிங்டன்
3. குன்னத்தூர் சந்தானம், சென்னை
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
ராஜேஷ் கார்கா, நியூஜெர்ஸி
மீ. முத்துசுப்ரமணியம், ராஸ்வெல், ஜார்ஜியா
சிங்காநல்லூர் கணேசன், ப்ரீமாண்ட், கலி.
மாலதி கண்ணன், தி.நகர், சென்னை
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.