தேவையான பொருட்கள்
அவரைக்காய், செளசெள, பீன்ஸ், கேரட், கொத்தவரைக்காய், சுக்கினீ/வெள்ளரிக்காய் இரண்டில் ஏதேனும் ஒன்று. பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 மிளகு - 6 அரிசி - 1/2 தேக்கரண்டி தேங்காய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிது கடுகு - தாளிக்க கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தாளிக்க, வறுக்க
செய்முறை
பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். காயை நறுக்கி உப்பும் போட்டு வேக விடவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு மிளகு, மிளகாய் வற்றல், அரிசி, உளுத்தம் பருப்பு வறுத்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும் பருப்பு வெந்தவுடன் காயுடன் அரைத்த விழுதைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போடவும்.
வெறும் பச்சைமிளகாய், தேங்காய், சீரகம், அரைத்துவிட்டும் செய்யலாம். சாம்பார் பொடி போட்டுவிட்டுத் தேங்காத் துருவலை எண்ணெயில் சிவப்பாக வறுத்துப் போட்டும் செய்யலாம். பொரித்த குழம்புக்குப் புளி போடுவதில்லை.
தங்கம் ராமசாமி |