தேவையான பொருட்கள் காரட் துண்டங்கள் - 1/2 கிண்ணம் அவொகேடோ பழத் துண்டங்கள் - 1/2 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பால் - 1 கிண்ணம் தண்ணீர் - 1 கிண்ணம் காயவைத்த ஹெர்ப்ஸ் ரோஸ்மேரி (அ) பார்ஸ்லி போன்றவை - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகு - தேவைக்கேற்ப
செய்முறை: அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, குறைந்த தீயில் வைத்து காரட், அவொகேடோவை ஹெர்ப்ஸ் சேர்த்து வதக்கவும். சற்று ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து, மறுபடி அடுப்பில் மெல்லிய தீயில் வைத்து, பாலையும் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும். அதிகம் கொதித்தால் பழம் கசந்து விடும். பின் இறக்கி உப்பு, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பருகவும்
சரஸ்வதி தியாகராஜன் |