குவாகமோல் (Guacamole)
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1/2 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/4 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
அவொகேடோ பழம் - 2
எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 1/2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
யாலாபினோ மிளகாய் - 1/4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

கொத்துமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
பழத்தின் தோல், கொட்டையை நீக்கி நன்கு மசிக்கவும். இதனுடன் மீதிப் பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து இதனை உபயோகிக்கும்வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதை கார்ன் சிப்ஸுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com