மே 30 முதல் ஜூன் மாத இறுதிவரை மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சல்ஸ், ஆல்பகர்க்கி, டாலஸ் ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனைகள், அம்மாவின் தரிசனம் ஆகியவை நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக, தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.
'பலனை எதிபாராத பக்தியையே நாம் வளர்க்க வேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை அன்பாகும். அந்த அன்பை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். மனைவி கணவனின் அன்புக்காகத் தவிக்கிறாள். கணவனோ மனைவியின் அன்பு கிடைக்க வேண்டுமன விரும்புகிறான். இரண்டு யாசகர்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். இருவரும் ஞானிகள் அல்லர். அவர்களால் ஒருவரை ஒருவர் அறியவும் முடியவில்லை. அதுமட்டுமல்ல, அன்பை வெளிப்படுத்துவதும் இல்லை. மலைப் பாறைக்கிடையில் இருக்கும் தேனால் யாருக்கு பயன்? அதனால் அன்பை வெளிபடுத்தத்தான் வேண்டும். அதுபோல் குழந்தைகளிடமும் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்கிறார் அன்பின் இலக்கணமான அம்மா.
அம்மா ஜூலை மாதம் விஜயம் செய்ய இருக்கும் ஊர்களும், தேதிகளும்: கோரல்வில்,அயோவா 07.02 - 07.03 சிகாகோ 07.05 - 07.06 நியூயார்க் 07.08 - 07.10 வாஷிங்டன் டி.சி. 07.12 - 07.13 பாஸ்டன் 07.15 - 07.18 டொரன்டடீ, கனடா 07.20 - 07.23
மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகளைப் பற்றி அறிய: www.amritapuri.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org Amma photo copyrighted to M.A. Center, 2005
சூப்பர் சுதாகர் |