ஜூன் 2008 புதிரில் "படு மட்டம் ?(2)" என்ற குறிப்பிற்கு "கிட" என்ற விடை சிலரிடமிருந்து வந்தது. சிலருக்கு இதற்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. இதற்கான விடை "கிடை". கிடை மட்டம் என்பது ஆங்கிலத்தில் horizontal level என்பதற்கு இணையான சொல். (மட்டம் என்றால் level). அறிவியல் பாடப் புத்தகங்களில் இச்சொல்லைப் புழங்குகிறார்கள். படுத்திருக்கும்போது கிடையாக இருப்பதால் இக்குறிப்பு ஓரளவு பொருத்தமென்று நம்புகிறேன். மற்றொரு குறிப்பு 13. வாகீசர். இது திருநாவுக்கரசருக்கு மற்றொரு பெயர். "சிவகாமியின் சபதத்தைப்" படித்தவர்களுக்கு இது எளிதில் தோன்றியிருக்கும். இவர் சுந்தரர், சம்பந்தரோடு சேர்த்து சைவ சமயக் குரவர் எனப்படுவதால் குறிப்பை அப்படி எழுதியிருந்தேன்.
உங்களில் யாராவது புதிரையமைக்க முன்வந்தால் இதுபோன்ற என்னுடைய பழங்காலப் பித்திலிருந்து விடுபட்ட, வேறுவிதமான புதுமையான புதிர்களை உருவாக்க முயலும் என்று நம்புகிறேன்.
இணையத்தில் வலைப்பதிவுகளில் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்திப் பினாத்தல் சுரேஷ் என்பவர் (penathal.blogspot.com) புதுவிதமாகச் செய்து வருகிறார். இலவசக் கொத்தனாரும் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார். (elevasam.blogspot.com). தென்றல் வாசகர்களிலும் பலரும் ரசிக்கும் வண்ணம் திறமை கொண்ட படைப்பாளிகள் இருக்க வேண்டும். வெளியே வாருங்கள்!
vanchinathan@gmail.com
குறுக்காக
3. பசும்பொன் மனதில் குறை? (5)
6. யோசித்து ஓரிடத்தில் இருந்துவிட்டு யமுனைத் தொடக்கத்தைச் சூழ் (4)
7. போய்ச் சேர்ந்த பின் தரப்படும் கவளம் (4)
8. நூலுக்கு ஆதாரம் அவ்விதம் சம்பளத்தில் ஒரு பகுதியாகும் (6)
13. பாரியை நடக்க வைத்த தாவரம் (6)
14. குறையான தானியம் செயல் பெண்ணெடுப்பது (4)
15. கட்டிக்கொள்ள நறுமணக் கயிற்றில் தேடு (4)
16. தலையில் இருப்பது என்ன என்று கேட்க இயலவில்லை (4)
நெடுக்காக
1. பல் பூச்சரம் (5)
2. விஷ்ணுவின் கைப்பொருள் கலங்கிட அதிகம் கதியில்லாப் பாகனிடம் இருக்கும் (5)
4. ஒருவருக்குச் சொந்தமான யானை ஒருபைசாவுக்கு பல உண்டா? (4)
5. கழுத்து வெண்ணிறமென்பதால் நீலக்கழுத்துவாசிக்கு ஆகாதோ? (4)
9. முத்தான கல் (3)
10. இந்தக் கணம் விந்தியமலைக்கும் இலங்கைக்குமிடையே உள்ளது (5)
11. கடைசி முதல் இறுதியாகத் தாக்க, கட்டிடத்திற்குத் தொடக்கம் (5)
12. தடுமாறிக் கள்ளால் (கல்லெறிந்து) வெளியே வீங்கு (4)
13. முயன்று பரிந்து குதிரையோட்டத்திற்கு முன் நுனி (4)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூலை 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com.
ஜூன் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 5. ஏழை 6. சுருக்கமான 7. மாதுங்கா 8. விடிவு 9. கட்சி 11. குமரி 13. வாகீசர் 16. நிலைநாட்டிய 17. கிடை
நெடுக்காக: 1. அழைத்து 2. காசுக்காக 3. நோக்கு 4. சீமாட்டி 10. சிவாலயம் 12. மல்லையா 14. சங்கிலி 15. பட்டை
ஜூன் 2008 புதிர் அரசிகள் / மன்னர்
1. ஆர். நரசிம்மன், மயிலை, சென்னை
2. வி. ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
3. சுபா பாலாஜி, ப்ளசண்டன், கலி.
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
வி.சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
லக்ஷ்மி சுப்ரமணியன், மும்பை
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.