தேவையான பொருட்கள் அரிசிமாவு - 1 கிண்ணம் வெல்லம் - 1/2 கிண்ணம் பால்மாவு / கோவா - 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி ஏலப்பொடி - 1 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி மைதா மாவு - 1 கிண்ணம் எண்ணெய் - பொரிக்க
செய்முறை வெல்லத்தைக் கெட்டிப் பாகு வைத்து, அரிசி மாவில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் கோவா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் எல்லாம் விட்டுப் பிசைந்து வைக்கவும்.
மைதா மாவை 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவைச் சிறு எலுமிச்சை அளவு வைத்துப் பரத்தி, நடுவில் பூரணம் வைத்து மூடித் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
அமர்க்களமான பெட்டி அதிரசம் தயார்.
தங்கம் ராமசாமி |