அதிரசம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
எள் - 1 தேக்கரண்டி
கோதுமை மாவு /
மைதாமாவு - 1 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
அரிசியை ஊறவைத்து வடியவிட்டு மிக்சியில் மாவு அரைத்து, நைசாகச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வெல்லத்தைப் பாகு வைக்கவும். தேங்காய்த் துருவலை அதில் போடவும். பாகை ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் துளி போட்டுப் பார்த்தால் கையிலிருந்து நழுவி விழும் பதம் வரும் போது இறக்கிவிடவும்.

ஒரு தட்டில் மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாகப் பாகை ஊற்றிக் கரண்டியால் கிளறிக் கெட்டியாக ஆனதும் எள், நெய், கோதுமை மாவு, ஏலக்காய் இவற்றைப் போட்டுச் சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.

பிறகு துளி தயிர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறு எலுமிச்சை அளவு மாவை சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.

எண்ணெய் வாணலியில் விட்டுக் காய்ந்தவுடன் போட்டு மேலாகச் சட்டுவத்தால் எண்ணெய் ஊற்றி வேகவிடவும். அப்பொழுது உப்பலாக வரும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

இதுமிகவும் சுவையாக இருக்கும். மாவை பிரிட்ஜில் வைத்துக்கொண்டு வேண்டியபோது செய்து சாப்பிடலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com