தேவையான பொருட்கள் அரிசி - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் முந்திரிப் பருப்பு - 4 பாதாம் பருப்பு - 2 தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 சிறு துண்டு பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க
செய்முறை அரிசி, உளுத்தம் பருப்பு, பாதாம், முந்திரி ஊறவிட்டு மிக்சியில் உப்புப் போட்டு தேங்காயும் சேர்த்து, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் எல்லாம் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி, கருவேப்பிலை பொடியாய் நறுக்கிப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். தோசைமாவு போல இருக்க வேண்டும்.
சிறு சிறு அப்பங்களாக ஊற்றி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
தேங்காயைச் சிறிய பற்களாகக் கீறிப் போட்டும் செய்யலாம். நான்கைந்து மணி நேரம் மாவை ஊற வைத்தால் மென்மையாகச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |