தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் வெல்லம் (அ) சர்க்கரை - 1/2 கிண்ணம் முந்திரிப் பருப்பு - 4 பாதாம் பருப்பு - 4 ஏலக்காய் - 4 மைதாமாவு - 1 கிண்ணம் நெய் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க
செய்முறை ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு எடுத்து தேங்காய், பாதாம், முந்திரி இவற்றுடன் மிக்சியில் மைய அரைக்கவும். அதில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டு, வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு ஏலப்பொடியும் சேர்த்து கெட்டியாகக் கிளறிப் பூரணம் செய்து கொள்ளவும்.
மைதாமாவை சிறிது எண்ணெய் அல்லது நெய்விட்டு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பெரிய கோலி அளவு எடுத்து மாவைப் பரத்திக் கொள்ளவும். நடுவில் ஜவ்வரிசிப் பூரணம் வைத்து மூடித் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுவும் சுவையான அப்பம்.
தங்கம் ராமசாமி |