மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
ஏப்ரல் 27, 2008 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை வசந்தம் நிகழ்ச்சி பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஸீஹோம் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. டெட்ராய்ட் பிஸ்தாவினரின் முதல் நாடகம் 'கொலையுதிர் காலம்', சுஜாதாவின் கதையைத் தழுவியமைந்தது. நிரஞ்சன் ராவ் திறம்பட இயக்கியிருந்தார்.

நிரஞ்சனின் நடிப்பும் வசனமும் நாடகத்தின் இறுதிவரை தொய்வின்றித் தொடர்ந்து பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. விஜியும், நிரஞ்சனின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்தார். சதீஷ் சுப்பிரமணியம், நரேன் பாலசுப்பிரமணியம், தீபக் குமார், முகுந்த் ஸ்ரீதர் ஆகியோரின் நடிப்பு கதையைக் கண்முன் நிறுத்தியது. ஒப்பனையில் டாக்டர் வெங்கடேசனின் கைவண்ணம் மிளிர்ந்தது. நாடகத்திற்குள் நடைபெற்ற நாடகத்தின் விளக்கத்துடன், சீதாராம ராவின் நேர்மைக்கு 4 கோடி ரூபாய் பரிசுடன் முடிந்த நாடகத்தின் முடிவு நல்ல திருப்பம்.

ஒலி, ஒளி அமைப்பை முத்து சிவானந்தமும், ரவி வேங்கடமும் திறமையுடன் கையாண்டனர். நேர்த்தியாக அரங்கேறிய இந்த நாடகம் டெட்ராய்ட் பிஸ்தாவினரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தலைவர் காந்தி சுந்தர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவிய அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்.


© TamilOnline.com