ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
லிவர்மோரிலுள்ள (கலிபோர்னியா) திருக்கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் உத்சவ மூர்த்திகள் கோவிலுக்கு வெளியே பக்தர்களின் இல்லங்கள் அல்லது சமுதாயக் கூடங்களில் கல்யாண உத்சவம் நடத்தும் பொருட்டுப் புதிதாக சம்ப்ரோட்சணம் செய்யப்பட்டுள்ளன. சம்ப்ரோட்சணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 48 நாட்கள் மண்டல பூஜையின் இறுதிநாள் விழா 3 மே, 2008 அன்று நடந்தது.

கோவிலுக்கு வெளியே முதன்முதலாகக் கல்யாண உத்சவம் சியாமளா, கே. வெங்கடேஸ்வரன் ஆகியோரின் இல்லத்தில் மே 4 அன்று சான் ஹோசேயில் நடந்தேறியது. நூறு பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த வைபவத்தை லிவர்மோர் கோவில் புரோகிதர்களான சம்பத் ஸ்ரீதரன், சம்பத் பட்டர் ஆகியோர் நடத்திவைத்தனர். இது தொடங்கி இனிமேல் பல இடங்களிலும் ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம் நடைபெறும்.

சியாமளா வெங்கடேஸ்வரன்

© TamilOnline.com