2008 ஜூலை 4 முதல் 6 வரை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 'தமிழ் விழா 2008'ஐ ஒர்லாண்டோ (புளோ.) நகரிலுள்ள பாப் கார் அரங்கத்தில் கொண்டாட இருக்கிறது. இது தமிழிசைப் பேரறிஞர் பெரியசாமி தூரன் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் அமையும்.
இந்த ஆண்டு விழாவை அலங்கரிக்க வரும் பிரபலங்கள்: 'புரட்சி நடிகர்' சத்யராஜ், 'மக்கள் இயக்குநர்' தங்கர்பச்சான், 'சன் டிவி' புகழ் ஈரோடு மகேஷ், தமிழிசை அறிஞர் மதுரை மம்மது, 'கலைமாமணி' சுதாரகுநாதன், 'புரட்சி இயக்குநர்' சீமான், பேரா. சுப.வீரபாண்டியன் மற்றும் பலர்.
'கலைமாமணி' நர்த்தகி நடராஜ் அவர்கள் வழங்கும் 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம், தமிழ்த் திரையுலகப் பாடகர்கள் நரேஷ் மற்றும் கிரீஷ், 'அய்ங்கரன்' இசைக் குழுவினருடன் இணைந்து வழங்கும் மாபெரும் திரையிசைக் கொண்டாட்டம், 'இனி, தமிழ் வளர்வது: தாய்த்தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றம்; 'தாயே! தமிழே! வருங்காலம் நின் காலம்' என்ற தலைப்பில் கவியரங்கம் ஆகியவையும் இடம்பெறும்.
மேலும் ஆழியாறு சித்தர் யோக மையத்தின் யோக, தியானப் பயிற்சிப் பட்டறை, இன்பிட் மற்றும் தமிழ்மணம் (www.infitt.org, www.thamizmanam.com) இணைந்து வழங்கும் தமிழ் இணையம் / வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறை, www.tamilmatrimony.com வழங்கும் திருமண மண்டபம், NTYO, TYO வழங்கும் இளைஞர் சந்திப்பு, முன்னாள் மாணவர் சந்திப்பு, தொழில்முனைவோர் அரங்கு தவிர பல தமிழ்ச்சங்கங்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
கவியரங்கம் மற்றும் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள விரும்புவர் தொடர்பு கொள்ள: treasurer@fetna.org பேரவை மலருக்குக் கட்டுரை அனுப்ப: fetna.malar@gmail.com மேலும் விவரங்களுக்கு: www.fetna.org
தொடர்புகொள்ள: சி. சுப்பிரமணியம் (ஒருங்கிணைப்பாளர்) - 954.675.6883 - chrissubra@aol.com தில்லை க. குமரன் - 408.857.0181 - thillai@sbcglobal.net ஜே தபராஜ் - jaythabaraj@hotmail.com / 813.760.5615
மயிலாடுதுறை சிவா, தில்லை க. குமரன் |