சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
ஜூன் 8, 2008 அன்று மாலை 4:00 மணிக்கு சம்ஸ்கிருதி அறக்கட்டளை வழங்கும் 'வனமாலி' நடன நிகழ்ச்சி நடைபெறும். இடம்: Pfeiffer Hall, North Central College, 310 Benton Avenue, Naperville, IL-60540. பரதநாட்டியம், ஒடிஸி, கதக் ஆகிய நடன பாணிகளின் கதம்பமாக இது இருக்கும். பின்னணியில் கர்நாடக, ஒடிஸி, ஹிந்துஸ்தானி இசைப் பாடல்கள் ஒலிக்கும். இந்தப் பாடல்கள் தமிழ், ஒரியா, ஹிந்தி ஆகிய மொழிகளில் இருக்கும்.

இறைவன் மீது கொண்ட பக்தி, காதல், விரகம் ஆகியவற்றின் மெல்லிய ஊடாட்டத்தை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கும். ஷோபா நடராஜன், இப்ஸிதா சத்பதி, கிரண் சௌஹான் ஆகியோரின் நடன அமைப்பில் இது உருவாகியுள்ளது. சம்ஸ்கிருதி நடனக் குழுமத்துடன், உத்கலா ஒடிஸி மையம், அனிலா சின்ஹா அறக்கட்டளை (கதக் நிருத்ய கலாகேந்திரம்) ஆகியவற்றின் கலைஞர்கள் இதில் பங்குபெறுகிறார்கள். நேப்பர்வில் நகர SECA நிதி இதற்குப் பகுதி உதவி செய்துள்ளது.

நுழைவுச் சீட்டுகள்:
பொது மக்கள்: $15; மாணவர், முதியோர்: $10
புரவலர் இருக்கைகள் $50, $100 (குறைந்த எண்ணிக்கையில்)
மேலும் தகவலுக்கும் நுழைவுச் சீட்டுகளுக்கும்:
தொலைபேசி: 630.527.1898
மின்னஞ்சல்: info@samskriti.com
இணையதளம்: www.samskriti.com


© TamilOnline.com