2008 ஜூன் 6 முதல் 10 தேதி வரை அமெரிக்காவின் பல நகரங்களில் 'வாழும் கலை பயிற்சி-1' (அடிப்படைப் பயிற்சி) நடத்தப்பட உள்ளது.
வாழும் கலையை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் 1982ம் ஆண்டில் உலகுக்கு வகுத்து வழங்கினார். இதன் ஒரு பகுதியாக சுதர்ஸனக்ரியா எனப்படும் சக்தி வாய்ந்த செயல்முறைப் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல்நலம், மனநலம், மனத்தெளிவு, மகிழ்ச்சி, உற்சாகம், புத்துணர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன. இளைஞர்களுக்கு அளிக்கப்படும் YES! பயிற்சி அவர்களில் தலைமைப் பண்புகளை வளர்க்கிறது. சிறுவர்களுக்கான ARTEXCEL நல்லொழுக்கம், சுறுசுறுப்பு, நினைவாற்றல் ஆகியவற்றை வளர்க்கிறது.
வாழும் கலை வாரத்தில் அடிப்படைப் பயிற்சி பெற விரும்புவோர் உங்களுக்கு அருகிலுள்ள மையத்தில் பதிவுசெய்துகொள்ள: www.secure.artofliving.org/courses.aspx
ஜூலை 18 அன்று வரவிருக்கும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சான்டா கிளாராவுக்கு வருகை தரவிருக்கிறார்கள். அதனை முன்னிட்டு ஜூலை 13 முதல் 18 வரை பலவகை வயதினருக்குமான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
அதுகுறித்த விவரங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்பட இருக்கும் நிகழ்ச்சிகளும் அடுத்த தென்றல் இதழில் வெளியாகும்.
மேலும் தகவலுக்கு: www.us.artofliving.org/GP2008 தொலைபேசி: 800.455.0081
ரம்யா, ராஜமோகன், சன்னிவேல். |