2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீகக் குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சியாடல் மே 30 - ஜூன் 02 சான் பிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி ஜூன் 04 - 14 லாஸ் ஏஞ்சலஸ் 16 - 20 ஆல்பகர்க்கி 22 - 26 டாலஸ் 29 - 30 கோரல்வில், அயோவா ஜூலை 02 - 03 சிகாகோ 05 - 06 நியூயார்க் 08 - 10 வாஷிங்டன் டி.சி. 12 - 13 பாஸ்டன் 15 - 18 டொரன்டோ , கனடா 20 - 23
இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக, தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை இடம்பெறும்.
மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றிவரும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: http://www.amritapuri.org/social/
மேலும் விபரங்களுக்கு: www.amma.org Amma photo copyright: M.A. Center, 2005
சூப்பர் சுதாகர் |