1. ஒரு குடும்பத்தினரின் மொத்த எடை 170 கிலோ. தந்தையின் எடை இரு மகன்களின் சராசரி எடையை விட 100 கிலோ அதிகம். இரண்டாவது மகனின் எடை முதல் மகனது எடையை விட 60% குறைவு என்றால் மூவரது தனித்தனியான எடை எவ்வளவு?
2. ABCD என்ற பக்கங்களைக் கொண்ட உள்ள ஒரு சதுரவடிவக் கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் 27 தூண்கள் தேவைப்பட்டால் மொத்தம் அதற்கு எத்தனை தூண்கள் தேவைப்படும்
3. ஒரு எண்ணை 2, 3, 4, 5, 6 ஆகியவற்றால் வகுக்க மீதி 1 வருகிறது. அதே எண்ணை 7-ஆல் வகுக்க மீதி பூஜ்யம் வருகிறது. அந்த எண் எது? அதைப் போன்ற தன்மை கொண்ட பிற எண்கள் யாவை?
4. ஒரு தந்தையின் வயது மகனின் வயதை விட நான்கு மடங்கு அதிகம். முப்பது வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதைப்போல இரு மடங்கு இருக்கும் என்றால் தற்போது தந்தையின் வயது என்ன, மகனின் வயது என்ன?
5. ராமுவிடம் ஐந்து லிட்டர் கொள்ளவுப் பாத்திரமும் 4 லிட்டர் கொள்ளவுப் பாத்திரமும் இருந்தது. அவன் அதிலிருந்து சரியாக 2 லிட்டர் தண்ணீரை அளந்து ஊற்ற வேண்டும். எப்படி ஊற்றியிருப்பான்?
அரவிந்தன்
விடைகள்
1. தந்தையின் எடை = X
மகன்களின் எடை = X1
மொத்த எடை =
தந்தையின் எடை + மகன்களின் மொத்த சராசரி எடை 170 கிலோ = X + X1
தந்தையின் எடை மகன்களின் எடையை விட 100 கிலோ அதிகம் என்றால்; 170-100 = 70/2 = 35
மகன்களின் மொத்த எடை = 35 கிலோ
தந்தையின் எடை 100 கிலோ அதிகம் = 100+35 = 135 கிலோ
குடும்பத்தின் மொத்த எடை = 135+ 35 =170
மகன்களின் மொத்த எடை = 35 கிலோ
இரண்டாவது மகனின் எடை முதல் மகனின் எடையை விட 60% குறைவு என்றால் முதல் மகனின் எடை = 25 கிலோ 60% குறைவு = 10 கிலோ
2. 104 தூண்கள் காரணம், ஒவ்வொரு வரிசையின் முதலாவது தூணே மற்றொரு வரிசையின் 27வது தூணாக இருப்பதால். (27 X 4) - 4 = 108-4 = 104. ஆக 104 தூண்கள் மட்டுமே தேவை.
3. அந்த எண் 301. பிற எண்கள் 721, 1141, 1561, 1981...
4. மகனின் வயது = X
தந்தையின் வயது = 4 X
முப்பது வருடங்களுக்குப் பிறகு மகனின் வயது = X+30
முப்பது வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது = 2(4X+30) = 8X+60
X+30
8X+60
-------------
9X+90
-------------
X+4X = 9X+90
X = 9X-4X+90
X = 5X+90
X+5X = 90
6X = 90
X = 15
ஆக மகனின் வயது 15
தந்தையின் வயது = 4X = 4 X 15 = 60
முப்பது வருடங்களுக்குப் பிறகு மகனின் வயது = X+30 = 15+30 = 45
முப்பது வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது = மகனின் வயதைப் போல இரு மடங்கு = 2 X 45 = 90
ஆக மகனின் தற்போதைய வயது = 15
தந்தையின் தற்போதைய வயது = 60
5. முதலில் ஐந்து லிட்டர் பாத்திரத்தை முழுமையாக நிரப்பி அதனை நான்கு லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்பு அதனைக் கீழே ஊற்றி விட வேண்டும். ஐந்து லிட்டர் பாத்திரத்தில் எஞ்சி இருக்கும் 1 லிட்டர் நீரை 4 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.பின் மீண்டும் 5 லிட்டர் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதனை நான்கு லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அதில் ஏற்கனவே 1 லிட்டர் நீர் நிரம்பி இருப்பதால் 3 லிட்டர் ஊற்றினாலே அது நிரம்பி விடும். ஆக ஐந்து லிட்டர் பாத்திரத்தில் எஞ்சி இருப்பது 2 லிட்டர் தண்ணீர் மட்டுமே.