தேவையான பொருள்கள் கொத்துமல்லி விதை - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 6 கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி புளி - ஒரு சிறு எலுமிச்சையளவு பெருங்காயத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை கொத்துமல்லி விதையை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுக்கவும். பெருங்காயம் புளியைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எல்லாவற்றையும் உப்பு சேர்த்து நைசாக மிக்சியில் அரைத்து எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சல்லடையில் சலித்து சலித்து அரைத்தால் நைசாக இருக்கும்.
சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். தலைசுற்றல், பித்தத்திற்கு மிகவும் நல்லது.
தங்கம் ராமசாமி |