தேவையான பொருள்கள் துவரம் பருப்பு - 2 கிண்ணம் மிளகு - 1 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 8 உப்பு - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு
செய்முறை வாணலியில் துவரம்பருப்பைச் சிவக்க வறுக்கவும். மிளகு, மிளகாயையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்து மிக்சியில் நைசாகப் பொடி செய்து எடுக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதை சாதத்தில் போட்டு எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பாதி துவரம்பருப்பும், பாதி கடலைப்பருப்பும் சேர்த்துச் சிலர் செய்வார்கள்.
தங்கம் ராமசாமி |