புலாவ் மசாலா பொடி
தேவையான பொருள்கள்
கசகசா - 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1/2 கிண்ணம்
உலர்ந்த தேங்காய்த்
துருவல் - 2 தேக்கரண்டி
முந்திரி - 4
ஏலக்காய் - 4
பட்டை - சிறிதளவு

செய்முறை
உலர்ந்த தேங்காய்த் துருவல் தவிர மற்றவற்றை வாணலியில் தனித்தனியே வறுக்கவும். தேங்காயை அந்தச் சூட்டிலே சிறிது பிரட்டவும்.

எல்லாவற்றையும் மிக்சியில் பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள். புலாவ் செய்து அடுப்பிலிருந்து இறக்கும்போது இந்தப் பொடியைப் போட்டு இறக்கவும். மணக்கும், மயக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com