கரம் மசாலா பொடி
  தேவையான பொருள்கள் கொத்துமல்லி விதை	-	1/2 கிண்ணம் சீரகம்	-	2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்	-	3 மிளகு	-	1 மேசைக்கரண்டி பட்டை	-	2 அங்குலம் ஏலக்காய்	-	5 கிராம்பு	-	3 மஞ்சள் பொடி	-	சிறிதளவு
  செய்முறை மேலே கூறிய எல்லாவற்றையும் தனித் தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். மிக்சியில் பொடி செய்து மஞ்சள் பொடியையும் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் பொரியல், சாம்பார், வற்றல் குழம்பு, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் சப்ஜி எல்லாவற்றிலும் போட்டுக் கொள்ளலாம். மணமும் சுவையும் தூக்கும்.
  தங்கம் ராமசாமி |