ரமா ஸ்ரீராம் தமிழாக்கம்: லதா சந்திரமெளலி
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) 2008 மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 வரை மான்செஸ்டரில் உள்ள நியூ ஹாம்ப்ஷயர் சமுதாயத் தொழில்நுட்பக் கல்லூரியில் (NH Community Technical College) நடத்திய போட்டிகளில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை எழுதுதல், கணிதம், புவியியல் வினாவிடை, மேடைப் பேச்சு, ஆங்கிலத்தில் spelling and vocabulary bee போன்ற போட்டிகள் இடம்பெற்றன.
இதில் பங்கேற்ற குழந்தைகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் தேசிய இறுதிச் சுற்றில் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். அனைத்து போட்டிகளையும் நியூ ஹாம்ப்ஷயர் இந்திய வடதென் அறக்கட்டளையின் (IANH North South Foundation) திட்டத்திற்கு உதவியாக நடத்துகிறார்கள்.
இதில் பெற்றோர்களுக்காகவும் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். மார்ச் 22 அன்று நடந்த வந்தேறல் (immigration) ஆலோசனையில், தூதர் ஜார்ஜ் பிரானோ வந்தேறல் சட்டங்களில் சமீபத்திய மாற்றங்களைப் பற்றி உரையாற்றினார். IANH-இன் சஹேலி குழுவினர் மார்ச் 29 அன்று அரங்கேற்றிய 'Unveiling Domestic Violence' என்ற நாடகம் பாராட்டப்பட்டது. டான் ரீம் அவர்கள் உட்குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட Bridges அமைப்பின் சேவைகளைப் பற்றிப் பேசினார். ரீம் அதன் தலைவராவார்.
நிகழ்ச்சியின் முதல் நாளன்று சங்கத் தலைவர் பிருத்வி குமார் சங்கத்தினர் மேற்கொண்டுள்ள சமூகத் தொண்டுகளைப் பற்றி விளக்கினார். பிரிதிக் கல்யாணபூ, இளைஞர்தளத் தலைவர், சமூக சேவைகளில் இளைஞர்களின் பங்கு பற்றிப் பேசினார். இறுதி நாளில் எல்லா தொண்டர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கு பெற்றோருக்கு NSF பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கொடுத்தனர்.
ரமா ஸ்ரீராம் தமிழாக்கம்: லதா சந்திரமெளலி |