தமிழ்ப் புத்தாண்டு விழா டெலவர் பெருநிலப் பள்ளத்தாக்கு தமிழ்ச் சங்கம்
குழந்தைகளின் ஆத்திசூடி, அணிலும் ஆடும், ரைம்ஸ், நடனம், பாட்டு எனப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெண்மேகம் பாட்டுக்கு நடனமாடிய குழந்தைகளும், செந்தமிழ்த் தேன்மொழியாள் பாட்டுக்கு நடனமாடிய அஸ்வினி ஐயப்பனும் கைதட்டல் பெற்றனர்.

தலைவர் உரை, டாக்டர் சரஸ்வதி வழங்கிய 'ஸ்ட்ரோக்' பற்றிய உரையாடல், பன்னீர் செல்வம் அவர்களின் தமிழ் பற்றிய உரை ஆகியவை சிறப்பாக இருந்தன.

அடுத்து வந்தது 'பணமா? பாசமா?' பட்டிமன்றம். 'பணமே' என்று அல்லி, சூரி, நரசிம்மன் ஆகியோரும், 'பாசமே' என்று கற்பகம், வேளாங்கண்ணி ராஜ், லதா ஆகியோரும் வாதாடினர். நடுவர் அன்பு தமது பெயருக்கேற்ப 'பாசமே' என்று தீர்ப்பளித்தார்.

'தென்றலே என்னைத் தொடு' புகழ் நடிகை ஜெயஸ்ரீ 'திருவாளர்-திருமதி' நிகழ்ச்சியை நடத்தினார். இதன் தொடக்க நிகழ்ச்சி TAGDV அரங்கத்தில் நடந்ததில் மிக்க மகிழ்ச்சி. முதலாவதாக அறிமுகச் சுற்றும், இரண்டாவதாக நடனச் சுற்றும், மூன்றாவதாக பரிசுப்பொருள் கட்டுதலும் நான்காவதாகப் புரிதல் சுற்றும் நடந்தன. ஆறு ஜோடிகளின் (அல்லி-அன்பு; கற்பகம்-முத்தரசன்; லாவண்யா-ராமகிருஷ்ணன்; ஹேமா-வோளங்கண்ணி ராஜ்; அனுபமா-செந்தில்; கமலா-ஸ்ரீதர்) அறிமுக சுற்றுக்குப்பின் அற்புதமான நடனம் அரங்கத்தை ஆக்கிர மித்தது. அல்லி-அன்பு, ஹேமா-வேளாங் கண்ணி ராஜ் ஆகியோரின் நடனங்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றன.

லாவண்யா-ராமகிருஷ்ணன் தம்பதியினர் தங்களின் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் சுற்றில் சிறப்பாக செய்ததால் திருவாளர்-திருமதி பொட்டியை வென்றனர்.

'திருவாளர்-திருமதி' நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் விஜி மாலையணிவித்தார். லதா திருவாளர்-திருமதி நினைவுக் கேடயம் வழங்கினார். கவிதாஸ் சால்வை போற்றி நன்றி கூறினார்.

லதா சந்திரமெளலி

© TamilOnline.com