ஏப்ரல் 20, 2008 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழாவை முத்தமிழ் விழாவாக நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சங்கீதாவின் புஷ்பாஞ்சலி, அட்சராவின் திருக்குறள், அருண் சிவராஜ், திவ்யா சிவராஜின் ஆத்திசூடி, பாரதி பாடல்கள் இடம்பெற்றன. ப்ரீதியும் சூர்யாவும் வீணை வாசித்தனர். சாதனைகள் படைத்த சந்தீப் பரத்வாஜின் வயலின் அருமை. ஷோபா வெங்கட் அமைத்திருந்த 'காத்திருப்பான் கமலக் கண்ணன்' நடனமும், சௌமியா குமரன் வடிவமைத்திருந்த காவடிச்சிந்தும், ஜெயந்தி கிருஷ்ணனின் குற்றாலக் குறவஞ்சி நடனமும் மிகச் சிறப்பு. வசுமதி எழுதி இயக்கிய புத்தாண்டின் சிறப்புப் பற்றிய நாடகம் அருமை. அக்ஷயா இசைப்பள்ளி மாணவிகளின் சாந்தி நிலையம் பாடல் இனிமையாக இருந்தது. நிகழ்ச்சியில் திவ்யா அனந்தனின் பாட்டும் இடம் பெற்றது. சிறப்பு நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற 'மெட்டி ஒலி மாதர் ஐவரின் மெட்டி ஒலி' பாடல் நடனம் உள்ளத்தைக் கவர்ந்தது.
கருத்தரங்கத்தில் பேசிய பார்வையாளர்கள், பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டிச் சுவையாகப் பேசினர். நடுவர் சவரிமுத்து சிகாகோ தமிழ் இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வாசகர் வட்டம் உருவாக்குவது குறித்துப் பேசினார். கலை சந்திரா சிலப்பதிகாரத்தில் நாட்டிய சாஸ்திரம் குறித்தும், குப்புசாமி
கம்பர் கவிநயம் பற்றியும், ரங்கநாதன் பாரதிதாசன் பெண்ணின் பெருமையைப் போற்றியது குறித்தும் உரையாற்றினார்கள். பிரீதி மணிவாசகம் திருக்குறளில் பொருளா தாரம் பற்றிய வள்ளுவரின் கருத்து இன்றும் எப்படிப் பொருந்தும் என்பது குறித்து உரையாற்றினார். ·பாதர் ஜோசப் லைனல், வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குருவின் சீடர்கள் பற்றியும் நகைச்சுவையுடன் பேசி பலத்த கைதட்டலைப் பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற ‘தமிழ்நாட்டின் நடனங்கள்’ நிகழ்ச்சி மிக அருமை. வர்ணனையும் நடனமும் கலந்து இதை மிக அருமையாக இயக்கியிருந்தார் ராஜி விவேக். தமிழ்நாட்டின் எல்லாவகை நடனங்கள் பற்றியும் அழகான செட்டிநாட்டுத் தமிழில் அருமையாகத் தொகுத்து வழங்கினார் சரோஜா சேவுகன். சௌமியா குமரன் அமைத்த பரதமும், யாமினி-ப்ரவீணா வழங்கிய கரகாட்டமும் அருமை. சிகாகோ மங்கையர்கள் வழங்கிய ஒயிலாட்டம் அரங்கம் அதிரும் கைதட்டலைப் பெற்றது. மயிலாட்டம் ஆடிய சிறுமிகளும், மீனவ நடனம் ஆடிய சிறுவர், சிறுமியரும் மனதைக் கொள்ளை கொண்டனர். இறுதி நடனமாக இடம் பெற்ற சென்னை பயாஸ்கோப் நடனத்தை மிகச் சிறப்பாக ஆடித் தங்கள் திறமையை வெளிக்காட்டினர் சுவேதா, கவிதா, ப்ரஷாந்த் தருண் ஆகியோர்.
இறுதி நிகழ்ச்சியாக ’பெப்பரப்பே’ தயாரித்து வழங்கிய மாரி+மாரி = மும்மாரி என்ற நகைச்சுவை நாடகம், அரங்கத்தில் சிரிப்பலை களைத் தோற்றுவித்தது. சந்திர சேகர் எழுதி இயக்கிய இந்நாடகத்தின் கடினமான வசனங்களைக் கூட இயல்பாகப் பேசி வியப்பில் ஆழ்த்தினர் நடிகர்கள். மேடை யமைப்பும், ஒப்பனையும் நாடகத்திற்கு மேலும் சிறப்பூட்டின.
இறுதி உரையாற்றிய தமிழ்ச்சங்கத் தலைவர் ரகுராமன், முத்தமிழ் விழாவைத் திறம்பட நடத்திய ராஜி விவேக், மீனா சுப்ரமணியம், அறவாழி ஆகியோருக்கும் விழாவின்இறுதி உரையாற்றிய தமிழ்ச்சங்கத் தலைவர் ரகுராமன், முத்தமிழ் விழாவைத் திறம்பட நடத்திய ராஜி விவேக், மீனா சுப்ரமணியம், அறவாழி ஆகியோருக்கும் விழாவின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
ஆர்.வி. |