'உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா-2006
ஏப்ரல் 15, 2006 அன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் சமூகசேவை செய்துவரும் உதவும் கரங்கள் அமைப்பின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் வசந்த விழாவான 'கலாட்டா-2006' நிகழ்ச்சியை Foothills College-இன் ஸ்மித்விக் அரங்கில் நடத்தியது. இது உதவும் கரங்களின் சமூக நலப்பணி முயற்சிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஆகும்.

முழுநாள் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் உச்சக்கட்டமாக அமைந்தது மாலையில் பிரபல பல்லவி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி. இது பல்லவியின் பத்தாண்டு காலச் சாதனையை நினைவு கூர்வதாகவும் அமைந்தது.

இதில் ஒரு முக்கிய நிகழ்ச்சி 'Galaata Idol'. முதல்முறையாக நடந்த இப்போட்டியில் நூற்றுக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். முதல் இரண்டு இடங்களை அடைந்த ஜானகி நாகராஜன் மற்றும் T.N. அருணகிரி இருவரும் பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடினர். பார்வையாளர் அளித்த வாக்குக்களின்படி அருணகிரி 2006-இன் 'Galaata Idol' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Matinee Madness நிகழ்ச்சியில் கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்றவை இடம்பெற்றன. கலாட்டாவுக்கே உரித்தான 'பேட்டை நடை' (Pettai Walk) என்னும் ஆடையலங்கார அணிவகுப்பும் நடன நிகழ்ச்சியும் நடந்தேறியது.

ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் பணிபுரிந்து வரும் உதவும் கரங்கள் நன்கொடை மற்றும் தொண்டர்களை வரவேற்கிறது.

தொடர்புகொள்ள: http://www.ukdavumkarangal-sfba.org, http://www.galaata.org

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com