மே 2008 : வாசகர் கடிதம்
வாசகர்களின் தீர்ப்புக்கு விடுகிறோம்

"இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். இப்படிப் பல எழுத்தாளர்கள் முன்னரும் எழுதி யுள்ளனர், இனியும் எழுதுவார்கள்.

வணிகமுறை எழுத்தாளர்கள், சினிமா இயக்குனர்கள், மாடல்கள், டீவித் துறையினர் ஆகியோரை நாம் வெகு வாகப் புகழ்கிறோம். ஆனால் உயிர் காக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பலதுறை அறிஞர்கள் ஆகியோரைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. யார் யாரைக் கெடுக்கிறார்கள்? குறையறிவு கொண்ட நீங்களா (பத்திரிகைகளா?) அல்லது மக்களா?"

மேற்கண்டவாறு நமக்கு எழுதியிருக் கிறார் K. ராஜாராம் என்ற வாசகர். (இது அவரது ஆங்கிலக் கடிதத்தின் தமிழ் வடிவம்).

சுஜாதா என்ற எழுத்தாளரைப் பற்றியும் தென்றலைப் பற்றியும் இவரது மதிப்பீடு கள் சரியானவையா? தென்றல் வாசக ரான நீங்கள் இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள். உங்கள் தீர்ப்பைக் காரணங்களுடன் செறிவாக, தெளிவாக எழுதி அனுப்புங்கள். தலைப்பில் 'வாசகர் தீர்ப்பு' என்று குறிப்பிட மறக்காதீர்கள்.

ஆசிரியர், தென்றல்

******


சுஜாதா, என்னை நானாக உருவாக்கிய எழுத்துக்களின் பிரம்மா, என் வாழ்க்கை யில் எப்போதும் என் முன்னே பிரமிப்பாக தோற்றமளிக்கும் அமைதியான புயல்.

பாலு, இந்தியா.

******


ஆம். சுஜாதா நிரப்ப முடியாத இழப்பு தான். அருமையான கருத்துக்கள். சூடாப் போடு போண்டா சூப்பர் போண்டா!

தமிழ்வேந்தன், மலேசியா

© TamilOnline.com