மே 20, 2006 அன்று, நோய்களைப் பற்றியும் வருமுன் காப்பதற்கான வழிமுறைகளையும்பற்றி அறிவுறுத்துவதற்காகச் சிகாகோ தமிழ்ச் சங்கமும் ஹெல்ப் (Help Foundation) நிறுவனமும் இணைந்து முதலாவது உடல்நல முகாமைச் சிகாகோவின் புறநகரான டௌனர்ஸ் க்ரோவ் நகரில் நடத்தினர். நீரிழிவு (diabetics), இரத்த அழுத்தம் (blood pressure), கொழுப்புச் சத்து (cholestrol), எலும்புத் தேய்மானம் (osteoporosis), மார்பகப் புற்றுநோய் (mammogram) போன்ற நோய்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பயனடைந்த சிகாகோ நகர மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தங்களது பொன்னான நேரத்தைச் சமூக நலத்திற்காக வழங்கிய மருத்துவர்கள் இந்த முகாமைச் சிறப்புறச் செய்தனர். பரிசோதனைகளின் முடிவுகள் அனவருக்கும் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.
இதில் சேவை செய்த பலதுறை மருத்துவர்கள்: வசந்தா ஆதிமூலம், காஞ்சனா ராஜசேகர், நடேசன் ஜானகிராமன், விபா தக்கர், கோபால் ஸ்ரீனிவாசன், உஷா ஸ்ரீராம், ராஜசேகர், நாசிர்பூர் ரவி, சிவப்ரகாசம், கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன், தேவகி சிவா, ஹுமேரா சையத், ஏஞ்சலினா குஸ்மன், ஈனஸ் ஈனஸ், சுரேஷ் கிருஷ்ணன், சிவராஜா குப்புசுவாமி, ரீனா ஜபமணி, நர்மதா குப்புசுவாமி, T.V.சுப்ரமணியன், ராஜ் ஐயர், மீனா ராம்மோஹன், வசந்தி பிரபாகரன், டயான் ஹெர்ன், குருசுவாமி.
சிகாகோ தமிழ் சங்கத் தலைவர் வீரா வேணுகோபால், ஹெல்ப் நிறுவனத்தைச் சேர்ந்த (Help Foundation) Dr. நர்மதா குப்புசுவாமி, சிகாகோ தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் (volunteers) மிகத் திறம்பட முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடத்த இடமும், பரிசோதனை செய்யச் செவிலியர் (Volunteer Nurses) தொண்டர்களும் தந்து உதவி செய்தது குட் சமாரிடன் (good Samaritan) மருத்துவமனை.
வரும் நிகழ்ச்சிகள்:
ஜூன் 4, 2006: அரோரா கோவில் அரங்கத்தில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் (Sun T.V. fame) வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி.
ஜூலை 22, 2006: எல்ஜின் சமுதாயக் கலையரங்கத்தில் (Arts Center, Eljin Community College, Elgin) நாட்டுப் புறக்கலைகளின் ராணி Dr. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தனது 18க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் சேர்ந்து வழங்கும் கலை நிகழ்ச்சி. இதில் கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி மற்றும் தீப்பந்தல் ஆட்டமும் உள்ளடங்கும்.
தொடர்பு கொள்ள:
வீரா வேணுகோபால்: nishnik@hotmail.com ராம் ரகுராமன்: rraghura@jjc.edu டோ னி சூசை: adsusai@comcast.net மீனா சுபி: meenasuby@comcast.net அறவாழி: pkaravazhi@yahoo.com
எஸ்டேட் சுபி |