தொடாமலே காதல்
நாயகனும் நாயகியும் ஒரு காட்சியில் கூடத் தொட்டுக்கொள்ளாமல் நடித்திருக்கும் புதுமையான படம் 'மண்ணில் இந்த காதல்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் ஜெய்கமல். புதுமுகம் ஜோதி கதாநாயகி. இவர்களுடன் ராஜேஷ், சண்முகசுந்தரம், சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பழையதே புதிய வேடத்தில் திரும்ப வரும் என்பார்கள். தொடாத காதலும் அப்படிப்பட்ட பழைய புதுமைதானே!

அரவிந்த்

-

© TamilOnline.com