சென்ற மாதப் புதிரில் 'பங்கெடு' என்ற விடை வருமாறு 'கலந்து கொள் கடைசிநாளுக்கு முன் பங்கஜம் மூன்றடி குறைந்தாள்' என்ற குறிப்பு இடம்பெற்றிருந்தது. விடை தற்காலப் புழக்கத்துக்குச் சரியாக இருந்தாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 'பங்கெடு' என்றால், சொத்தில் அல்லது வேறெதிலோ தனக்குரிய ஒரு பகுதியை எடுத்துக் கொள்வது என்றுதான் பொருள் இருக்க வேண்டும். 'கலந்துகொள்' என்ற பொருள் இல்லை. 'பங்கெடு' என்பது ஆங்கிலத்தில் take part என்பதைப் பொருத்தமின்றி மொழி பெயர்த்ததால் வந்தது. எடுப்பது என்ற சொல்லை ஆங்கிலத்தில் pick, pick up என்பதற்கு இணையாகப் பயன்படுத்தலாம். ஆனால் 'வகுப்பு எடுப்பது', 'மாத்திரை எடுப்பது' என்றெல்லாம் சொல்வது கீழே சிந்திக் கிடக்கிற பொருளைப் பொறுக்கியெடுப்பது போன்ற பொருளைத்தான் தருகின்றன. take என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பலவிதமான பொருள்கள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் 'எடுப்பது' என்ற சொல்லைப் பயன் படுத்துவது அழகான பொருளுள்ள சொற்களை இழக்கக் காரணமாகிவிடும். வகுப்பு நடத்துவது (taking classes), 'மாத்திரை சாப்பிடுவது அல்லது உட்கொள்வது (taking medicine), பொறுப்பை ஏற்பது (take responsibility), குறிப்பு எழுதுவது (take notes) என்பவைதான் சரியாக இருக்கும். நான் சொல்வதைச் சரியாக 'எடுத்துக்' கொள்ள வேண்டாம். சரியாகப் பொருள் கொள்ளுங்கள்.
குறுக்காக
3. பழி பாதி சொச்சம் வெறும் வாயை மெல்லுவதற்குள் போடு (5)
6. உள் நாக்கு வேட்கையில் சிக்கிய விளைவு (4)
7. சகலம் உலகை நீத்து வெளியே உண்மையைச் சொல்லிவிடு புரட்டியெடு (4)
8. ஸ்வரமின்றி நிலா கவர்தல் தடுமாற்றத்தில் கைநாட்டுக்காரர் (6)
13. சின்ன பழனிக்காரன் முன் கபால ருசி சிறிதளவில் மயங்கியவன் (6)
14. பாதி அணைத்து மாற்றி ஓடாதே பக்க பலமாயிரு (2, 2)
15. முதல் சக்தி மீண்டும் சக்தி அடைந்துவிட ஆசை (4)
16. வளம் பெருகிட எல்லைகளற்ற பாழிடம் வெட்டிக் கிளறிப் புரட்டு (5)
நெடுக்காக
1. மைந்தனுக்கு முன்னே தந்தை முன்னோடி (5)
2. ஒரு ரக மாற்றம் கொண்ட பூச்சு வாசனை பார்க்கத் தடையில்லை (5)
4. தாவணி கர்ப்பத்தை மறைத்திட வியாபாரி (4)
5. ஒரு நொடியில் விரலசைவில் ஒலியெழுப்பு (4)
9. திறமையுடைய புன்முறுவல் லட்சத்திற்குள் கிடைக்கும் (3)
10. மொட்டைத் தலையில் சூடு பெரிய காரியம் (5)
11. மிகப்பெரிய அடையாளம் முன் வைத்த உறவினள் (5)
12. விரலையொட்டியிருப்பது கோல் நடுவே அதுவின்றி அணையாது (4)
13. ஆகாயத்தில் ஆயர்பாடித் தெரு? (2, 2)
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மே 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. மே 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
மார்ச் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:
குறுக்காக: 1. செம்பொன் 3. அகப்படு 8. குகை 9. சந்ததி 10. சகலை 12. துருத்திய 13. மண்ணாசை 15. பழையாறை 16. கேழ்வரகு 19. கெஞ்சி 20. சுபாவம் 21. சகா 23. நம்புகிற 24. கம்பன்
நெடுக்காக: 1. செங்குத்து 2. பொய் 4. கத்திரி 5. பஞ்ச பாண்டவர் 6. வெந்தயம் 7. அலையோசை 11. அத்தியாவசியம் 14. மகேஸ்வரி 15. பங்கெடு 17. குடிகாரன் 18. பொசுங்கி 22. ஓம்
1. ஹேமா இலக்குமிநாராயணன், ராஸ்வெல், ஜார்ஜியா
2. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
3. குன்னத்தூர் சந்தானம், வேளச்சேரி, சென்னை
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
எஸ்.பி. சுரேஷ், மயிலை, சென்னை ஸ்ரீதர் விஜயராகவன், ப்ரீமாண்ட், கலி. வி ஆர் பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை கே ஆனந்த் பாலாஜி கிருஷ்ணய்யர், திருபுவனம். இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
மார்ச் மாதப் புதிருக்கான சரியான விடையை அனுப்பிய மற்றொருவர்: மாலதி கண்ணன், தி.நகர், சென்னை (இவர் பெயர் சென்ற இதழில் விடுபட்டுப்போனது).
புதிர் விடைகள் அடுத்த மாத (ஜுன் 2008) இதழில் வெளிவரும்.