தேவையான பொருட்கள்
மாதுளை முத்துக்கள் - 1 கிண்ணம் உலர்திராட்சை - 10 வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி எடுத்து, இதனுடன் உப்பு, சீரகத் தூள், மாதுளை முத்துக்கள், உலர்திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு கலந்து பயன்படுத்தவும்.
சரஸ்வதி தியாகராஜன் |