மாதுளம்பழ சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கிண்ணம்
பெரிய வெள்ளை வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
லவங்கப் பட்டை - 1/2" துண்டு
பச்சைமிளகாய் - 3
வெண்ணெய்/ஆலிவ்
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை
(bay leaf) - 1
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து ஒடித்த பாதாம்
பருப்பு - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

ஒரு வாயகன்ற வாணலியில் ஆலிவ் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை, பெருஞ்சீரகம் போட்டுச் சற்று வறுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் 3 கிண்ணம் தண்ணீர் விட்டு உப்புச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்தபின் அரிசியைப் போட்டுக் கலந்து கொதிக்கவிடவும். இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்த பின்னர் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும். அவ்வப்போது மூடியைத் திறந்து அரிசியை லேசாகக் கீழ்மேலாகக் கிளறவும். அரிசி நன்றாக வெந்து சாதம் பொலபொலவென்று வந்தபின்னர் வறுத்து ஒடித்த பாதாம் பருப்பைத் தூவவும்.

பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி மாதுளை முத்துக்களைத் தூவிக் கலந்து சாப்பிடவும். கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.

பச்சைப் பட்டாணி சேர்த்து இதைச் செய்தால் பார்க்க சுவையோ சுவைதான்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com